திருப்பதி அன்னதானத்துக்கு 15 டன் காய்கறி அனுப்பிய சென்னை வியாபாரிகள்!
ADDED :4212 days ago
சென்னை: திருப்பதி தேவஸ்தான அன்னதானத்துக்கு, சென்னை கோயம்பேடு காய்கறி வியாபாரிகள், 15 டன் காய்கறிகளை அனுப்பி வைத்தனர். சென்னை கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர், திருப்பதி தேவஸ்தான அன்னதானத்திற்கு நேற்று முன்தினம், 15 டன் காய்கறிகளை அனுப்பினர். இதுகுறித்து, காய்கறி வியாபாரிகள் சங்க ஆலோசகர்கள் சவுந்தரராஜன் கூறுகையில், நாங்கள் கடந்த, ஒன்பது ஆண்டுகளாக காய்கறிகளை அனுப்பி வருகிறோம். யுகாதி பண்டிகைக்கு காய்கறி அதிகம் தேவைப்படும் என்பதால், 15 டன் காய்கறிகளை அனுப்பி வைத்தோம். இதன் மதிப்பு, 1.20 லட்ச ரூபாய், என்றார்.