துலுக்கசூடாமணி கோவிலில் ஏப்.,9ல் திருவிழா துவக்கம்
ராசிபுரம்: கட்டனாச்சம்பட்டி துலுக்கச்சூடாமணி மாரியம்மன் கோவிலில், பொங்கல் திருவிழா, வரும் ஏப்., 9ம் தேதி நடக்கிறது. ராசிபுரம் அடுத்த கட்டனாச்சம்பட்டி துலுக்கச்சூடாமணி மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பொங்கல் திருவிழா நடத்தப்படும். அதன்படி, மார்ச், 25ம் தேதி கொடியேற்றம் நடந்தது. அதை தொடர்ந்து, வரும், ஏப்ரல், 8ம் தேதி, அதிகாலை, 4 மணிக்கு, பூவோடு பற்ற வைத்தல், காலை, 6 மணிக்கு பூவோடு எடுத்தல், இரவு, 7 மணிக்கு அம்மன் சக்தி அழைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடக்கிறது. அடுத்த நாள் (9ம் தேதி) அதிகாலை, 4 மணிக்கு அம்மன் சக்தி அழைத்தல், மாவிளக்கு பூஜையும், பொங்கல் வைத்தல் நடக்கிறது. 10ம் தேதி, காலை, 7 மணிக்கு அக்னி கரகம் எடுத்தல், அலகு குத்துதல், அம்மன் திருவீதி உலா நடக்கிறது. 11ம் தேதி மஞ் சள் நீராட்டு விழா, கம்பம் எடுத்தல், அம்மன் சக்தி கரகம் விடுதல், கொடி இறக் குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.