கரகண்டீஸ்வரர் கோவில் ருத்ராபிஷேகம்!
ADDED :4321 days ago
நகரி: நகரி, கரகண்டீஸ்வரர் கோவிலில், ருத்ராபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. சித்துார் மாவட்டம், நகரி டவுனில் அமைந்துள்ளது, காமாட்சி அம்மன் சமேத கரகண்டீஸ்வரர் கோவில். இக்கோவிலில், நேற்று முன்தினம் காலை, மூலவருக்கு ருத்ராபிஷேகம் நடந்தது. இதில், 10 அர்ச்சகர்கள் மந்திரங்கள் ஓதினர். தொடர்ந்து, கோவில் வளாகத்தில் உள்ள, காமாட்சியம்மன், நவகிரகம், சுப்ரமணிய சுவாமி, விநாயகர், சூரியன் மற்றும் ஐயப்ப சுவாமி ஆகிய சன்னிதிகளில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.