உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமர் கோயில் விழா துவக்கம்!

ராமர் கோயில் விழா துவக்கம்!

ராஜபாளையம்: ராஜபாளையம் கோதண்டராம சுவாமி கோயிலில், பிரம்மோத்சவம் விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்.8ம் தேதி நடைபெறும் இவ்விழாவில், நேற்று முன் தினம், சேனை முதல்வர் புறப்பாடு நடந்தது. நேற்று காலை, சுவாமிக்கு திருமஞ்சனமும், சிறப்பு பூஜைகளும் நடந்தன. தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. விழா நாட்களில் சுவாமி சிம்ம, அனுமந்த், சேஷ, கருட, யானை, குதிரை வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 5ம் தேதி, ராமர், சீதா திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை, தர்மகர்த்தா ஸ்ரீனிவாச ராஜா, கோயில் தேவஸ்தானமும் செய்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !