சத்தியமங்கலம் விக்ரகங்களுக்கு சிறப்பு பூஜை
ADDED :4210 days ago
செஞ்சி: சத்தியமங்கலம் கோதண்டராமர் கோவிலுக்கு வருகை தந்த கேட்டவராம்பாளையம் ஸ்ரீராம சாம்ராஜ்ய பட்டாபிஷேக விக்ரகங்களுக்கு பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம் கேட்டவரம்பாளையத்தில் ராம பஜனை மகா மண்டபத்தில் பட்டாபிஷேக ராமர் பிரதிஷ்டை செய்ய உள்ளனர். இந்த விக்ரகங்களை பொதுமக்கள் வணங்கவும், பூஜை செய்யவும் சென்னையில் இருந்து காஞ்சிபுரம், வேலூர், ஆரணி, சேத்துப்பட்டு வழியாக செஞ்சிக்கு கொண்டு வந்தனர். செஞ்சி தாலுகா சத்தியமங்கலம் கோதண்டராமர் கோவிலுக்கு வருகை தந்த விக்ரகங்களுக்கு பக்தர்கள் வரவேற்பளித்து சிறப்பு வழிபாடு நடத்தினர். கேட்டவரம்பாளையும் சென்றடையும் விக்ரகங்களுக்கு 30ம் தேதி துவங்கி அடுத்த மாதம் 7ம் தேதி வரை விசேஷ பூஜை, ஹோமங்கள் செய்து பிரதிஷ்டை செய்ய உள்ளனர்.