ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா
ADDED :4208 days ago
ஈரோடு : ஈரோட்டில் மிகவும் பிரசித்திப்பெற்ற பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோவில்களின் குண்டம் விழா கடந்த 18--ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து 22-ந் தேதி தேதி பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்களில் கம்பம் நடப்பட்டது.
நேற்று அமாவாசை என்பதாலும், பக்தர்கள் நீண்ட வரிசையில் விடிய விடிய காத்து நின்று கம்பத்துக்கு புனித நீர் ஊற்றினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை, தீபாராதனை நடந்தது. பக்தர்கள் அலகு குத்தி பறவை காவடி எடுத்து வந்து அம்மனுக்கு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். கோவிலின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் நடக்கிறது.