உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் யுகாதி பண்டிகை கொண்டாட்டம்!

பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் யுகாதி பண்டிகை கொண்டாட்டம்!

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில், யுகாதி (தெலுங்கு புத்தாண்டு) பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சியில், தெலுங்கு புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டது. புத்தாண்டையொட்டி, தெலுங்கு மொழி பேசும் மக்கள் புத்தாடை உடுத்தியும், வாழ்த்துக்களை தெரிவித்தும் கொண்டாடினர். கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், காமாட்சி அம்மன் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், தெலுங்கு புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான மக்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !