உகாதி விழா உற்சாகம் கோவிலில் சிறப்பு பூஜை!
ADDED :4207 days ago
கோவை : உகாதி விழாவையொட்டி, நேற்று கோவையிலுள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. தெலுங்கு மொழி பேசும் மக்களின் புத்தாண்டாக, உகாதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று கோவையிலுள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன; பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆர்.எஸ்.புரம் சுப்ரமணியம் ரோட்டிலுள்ள பலிஜநாயுடு திருமண மண்டபத்தில், உகாதிவிழா நேற்று மாலை நடந்தது. இதில் மாணவ மாணவியர் பங்கேற்ற, கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் நடந்தது. 10ம் வகுப்பு, பிளஸ் ௨, கல்லுாரி தேர்வுகளில் வெற்றிபெற்று அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதே போல, கோவையிலுள்ள கவரநாயுடு, பலிஜநாயுடு, கம்மநாயுடு சங்கங்களின் சார்பில் கலை, இலக்கிய, கலாசார போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.