நாகூர் தர்காவில் கந்தூரி விழா துவங்கியது!
ADDED :4212 days ago
நாகப்பட்டினம்: நாகூரில், 457வது ஆண்டு கந்தூரி விழா, நேற்று துவங்கியது. விழாவையொட்டி, காலை, 11:00 மணிக்கு நாகை மீரா பள்ளிவாசலில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டது. இரவு, 10:00 மணிக்கு தர்கா அலங்கார வாசலை வந்தடைந்தது. பின், தர்காவில் உள்ள, ஐந்து மினவராக்களிலும் கொடி ஏற்றப்பட்டது. இதையடுத்து நடந்த சிறப்பு தொழுகையில், திரளான யாத்ரீகர்கள் கலந்து கொண்டனர்.