உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நரசிம்மபெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு!

நரசிம்மபெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு!

பெ.நா.பாளையம்: யுகாதி பண்டிகையையொட்டி துடியலூர், பெரியநாயக்கன் பாளையம் வட்டாரங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. நரசிம்மநாயக்கன் பாளையத்தில் உள்ள நரசிம்மபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த விழாவுக்கு கோவில் நிர்வாகி ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கரிவரதராஜ பெருமாள் பூதேவி, தேவியுடன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பெருமாள்  கருடவாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். காளிபாளையத்தில் உள்ள திருமலைராயர் பெருமாள் கோவில், திருமலைநாயக்கன்பாளையத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவில், நாயக்கனூரில் உள்ள நரசிங்க பெருமாள், பாலமலை அரங்கநாதர் திருக்கோவில், பன்னிமடை கிருஷ்ணசாமி கோவில், இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாதர் கோவில், விவேகானந்தபுரம் பட்டத்தரசி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அன்னூர் புளியம்பட்டி ஊத்துக்குழி அம்மன் கோவிலில் யுகாதி பண்டிகை விழா நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. பின்னர் பரிவார தெய்வங்களுக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !