உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்ககிரி செல்லியம்மன், புத்து மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

சங்ககிரி செல்லியம்மன், புத்து மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

சங்ககிரி  ;சேலம் மாவட்டம், சங்ககிரி சந்தைபேட்டை செல்லியம்மன், புத்துமாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா மார்ச் 18 ஆம் தேதி பூச்சொரிதல், கும்பம் வைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.   அம்மனுக்கு தினசரி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்களுடன் பூஜைகள் நடைபெற்றன.  மார்ச் 31 -ஆம் தேதி திங்கள்கிழமை இரவில் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நேற்று   பூங்கரகம், பால்குடம், தீச்சட்டிகளை ஏந்தியும், அலகுக் குத்தியும்   முக்கிய வீதிகளின் வழியாக  பக்தர்கள் ஊர்வலம் வந்து கோயிலை அடைந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.  இன்று   சேத்து முட்டி எடுத்து பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், நாளை  (வியாழக்கிழமை) மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !