உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பங்குனி உத்திரவிழா: பணிகள் மும்முரம்!

பழநி பங்குனி உத்திரவிழா: பணிகள் மும்முரம்!

பழநி: பழநிகோயில் பங்குனி உத்திரவிழா ஏப்., 7 ல் துவங்க உள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துவருகிறது. கொடுமூடி தீர்த்தகாவடிக்கு புகழ்பெற்ற பங்குனிஉத்திரவிழா ஏப்., 7 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஏப்.,16 வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக, மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில் தகரத்தில் ஆன நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. நான்கு கிரிவீதி சுவர்களிலும், காவி, வெள்ளை வர்ணம்பூசும் பணி நடக்கிறது. பங்குனி உத்திரவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஏப்.,12 ல் நடக்கிறது. ஏப்., 13 ல் தேரோட்டம் நடக்கிறது. இதனை முன்னிட்டு, கிரிவீதியில் தேர்வலம் வருவதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றும்பணி நடக்கிறது. தற்போதே வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கொடுமூடி தீர்த்த காவடி எடுத்து வந்தவண்ணம் பழநிக்கு வந்து சுவாமிதரிசனம் செய்ய துவங்கிவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !