உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ ராமநவமியையொட்டி பந்தக்கால் நடும் விழா

ஸ்ரீ ராமநவமியையொட்டி பந்தக்கால் நடும் விழா

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அருகே ஸ்ரீ ராம அனுமன் கோவிலில் ஸ்ரீ ராமநவமி பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று பந்தக்கால் நடும் விழா நடந்தது. பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் எம்.ஜி.ஆர்., சிலை அருகே 127 அடி உயர ஸ்ரீ ராம அனுமன் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அங்கு ஸ்ரீ ராமநவமி பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்தாண்டு வரும் 8ம் தேதி துவங்கி 18ம் தேதி வரை நடக்கிறது. அதையொட்டி நேற்று பந்தக்கால் நடும் விழா நடந்தது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை, ஆராதனை நடக்கிறது. இரவு பரதநாட்டியம், இசை சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சியும், 13ம் தேதியில் இருந்து 17ம் தேதி வரை சம்பூர்ண ராமாயணம் நாடகம் நடக்கிறது. 18ம் தேதி அதிகாலை சீத்தாராமர் பட்டாபிஷேகம் நடக்கிறது. விவசாய சங்கத் தலைவர் விஜயகுமார், உத்திராபதி, தேசிங்கு, புஷ்பராஜ், சுகுமார், செந்தமிழ்ச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ராமஅனுமான் தர்ம பரிபாலன அறக்கட்டளைத் தலைமை அறங்காவலர் சீனு என்கிற ராமதாஸ் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !