புதூர் பூமாரிரேணுகாதேவி கோயிலில் பங்குனி விழா நிறைவு!
ADDED :4231 days ago
திருப்புவனம் : திருப்புவனம் புதூர் பூமாரிரேணுகாதேவி அம்மன் பங்குனி திருவிழாவின் நிறைவு நாள் விழாவில் பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா தொடங்கியது. நேற்று நிறைவுநாளில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் அக்னிசட்டி, ஆயிரம்கண் பானை, மாவிளக்கு, கரும்பு தொட்டில் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நள்ளிரவில் கோயில் வாசலில் ஆடு, கோழிகளை பலியிட்டும், பொங்கல் வைத்தும் விரதத்தை முடித்தனர்.