பங்குனி விழாவில் உடம்பில் ஊசி கோர்த்து நேர்த்திக்கடன்!
ADDED :4230 days ago
காரைக்குடி : பள்ளத்தூர் பழையூர் முத்துமாரியம்மன் கோயில், பங்குனி விழா கடந்த 25ம் தேதி தொடங்கியது. 28ம் தேதி விளக்கு பூஜை, 30-ம் தேதி பூச்சொரிதல் விழா நடந்தது. 9-ம் நாளான நேற்று முன்தினம் காலை பால்குடம், அக்னி சட்டி, பறவை காவடி ஊர்வலம் நடந்தது. இரவு, 11 மணிக்கு, பாரம்பரிய முறைப்படி, பெண்கள் சிறுவர்கள் உமாவிளக்கு ஏந்தி, கையில் நூல் கோர்த்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 30க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு, மாலை அணிவிக்கப்பட்டு, இடுப்பின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்தில் நூல் கோர்க்கப்பட்டது. இவர்கள் ஊரை சுற்றி வலம் வந்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.