உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாழடைந்த பிரகதீஸ்வரர் கோவில்: சீரமைக்க நடவடிக்கை தேவை!

பாழடைந்த பிரகதீஸ்வரர் கோவில்: சீரமைக்க நடவடிக்கை தேவை!

ரிஷிவந்தியம்: பாசார் கிராமத்தில் பாழடைந்த பிரகதீஸ்வரர் கோவிலை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தில் சின்னமலை, பெரியமலை என 2 மலைகள் உள்ளன. அதில் சின்ன மலையின் மேல் பகுதியில் பிரகதீஸ்வரர் கோவிலும், பெரிய மலையின் மேல் பகுதியில் முருகன் கோவிலும் உள்ளது. பிரகதீஸ்வரர் கோவில் சுமார் 1000 வருடங்களுக்கு முன் கருங்கற்களால் கட்டப்பட்டது. ஆலயத்தின் வடிவமைப்பு நேர்த்தியாகவும் வாஸ்து முறைப்படி உள்ளது. கிழக்கு திசையை நோக்கி கருவறையில் லிங்க சிலை உள்ளது. மலையின் ஒரு பகுதியில் உள்ள பாறைகள் முழுவதும் கல்வெட்டுகள் காணப்படுகிறது. ஆலயத்தில் அம்மன் சிலைகள், மகா விஷ்ணு சிலை, இரண்டு நந்தி சிலைகள் உள்ளன. இந்த சிலைகள் சேதமடைந்துள்ளன. கோவில்கள் பாழடைந்து மேற்புற பீடம் இல்லாமல் உள்ளது. கோவில் முழுவதும் செடிகள் வளர்ந்து சுவர்களுக்கு நடுவே விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆலயத்தின் கருவறையில் உள்ள லிங்க சிலை வெயிலிலும் மழையிலும் நனைந்து வீணாகி வருகிறது. பராமரிப்பு இல்லாததால் கோவில் முழுவதும் குப்பைகள் நிறைந்துள்ளன. இதனால் அக்கால தமிழர்களின் சிற்பக்கலையும், கோவிலின் வரலாறுகளும் அழிந்து வருகிறது. கோவினை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !