உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் நாளை பங்குனி தேரோட்டம்

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் நாளை பங்குனி தேரோட்டம்

மன்னார்குடி,: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் பங்குனி திருவிழாவில்  இன்று வெண்ணெய்த் தாழியும், நாளை, தேரோட்டமும் நடைபெறுகிறது.
விழாவின் 16-ம் நாளான  இன்று வெண்ணைத் தாழி உத்சவத்தை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு பல்லக்கில் தவழும் குழந்தை கண்ணன் வடிவில் சிறப்பு அலங்காரத்தில் உத்சவர் ராஜகோபால சுவாமி காட்சியளிப்பார்.  நாளை    மாலை 2 மணிக்கு, தேரில். சிறப்பு அலங்காரத்தில் உத்சவர் ராஜகோபால சுவாமி கோபாலசமுத்திரம் கீழவீதி. தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக வலம் வரும் தேரோட்டம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !