உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கிருத்திகை சிறப்பு பூஜை!

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கிருத்திகை சிறப்பு பூஜை!

திருப்போரூர் : திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், கிருத்திகை விழா நேற்று கொண்டாடப்பட்டது. திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், கிருத்திகை விழாவையொட்டி, அதிகாலை 4:00 மணிக்கு, உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர் அர்ச்சனை, தீப தூப ஆராதனை நடந்தது. வள்ளி, தெய்வானையுடன் கந்தப்பெருமான், சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்தனர். லோக்சபா தேர்தல் காலம் என்பதால், கரை வேட்டியினரும் அதிகளவு காணப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !