திருவாடானை தர்மர் திரெளபதி அம்மன் கோயில் திருவிழா
ADDED :4243 days ago
திருவாடானை : திருவாடானையில் உள்ள தர்மர் திரௌபதி அம்மன் கோயில் 100ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த செவ்வாய்க்கிழமை காப்புக் கட்டுதலுடன் விழா துவங்கியது.அன்றுமுதல் தர்மருக்கும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றன. பல்வேறு தெய்வங்கள் வேடம் அணிந்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்கள்.