திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் சவுந்திரநாயகியம்மன் கோயிலில் கொடியேற்றம்
ADDED :4240 days ago
திருப்புவனம் : திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் சவுந்திரநாயகியம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 10 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. அம்மன், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்,கொடிமரத்திற்கு சிறப்பு பூஜையை தெய்வசிகாமணி பட்டர் தலைமையில் கண்ணன், வீரமணி,செந்தில் உள்ளிட்ட சிவாச்சார்யார்கள் செய்தனர். 8ம் நாள்( 11ம் தேதி) திருக்கல்யாணம், 9 ம் நாள் (12ம் தேதி) தேரோட்டம் நடைபெறுகிறது.