மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் பங்குனி விழா
ADDED :4244 days ago
மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபால சாமி கோவில் உள்ளது. கோவிலில் மூலவர்களாக வாசுதேவபெருமாளும், செண் பகவல்லி தாயாரும் அருள் பாலித்து வருகிறார்கள். உற்சவர்களாக ராஜகோபால சாமியும், செங்கமலத்தாயாரும் அருள்பாலிக்கின்றனர். இந்த பங்குனி பிரம்மோற் சவம் கடந்த 18 நாட்களாக நடந்து வருகிறது. . இதில் பல்வேறு அலங்காரங்களில் ராஜகோபாலசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித் தார். நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு, ராஜ கோபாலசாமி ருக்மணி, சத்ய பாமாவுடன் சிறப்பு அலங் காரத்தில் கோவிலின் அனைத்து பிரகாரங்களிலும் வலம் வரும் “சப்தாவர்ணம்” நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.