உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடலூரில் பட்டத்துளசியம்மன் கோவில் தேர்த்திருவிழா

கூடலூரில் பட்டத்துளசியம்மன் கோவில் தேர்த்திருவிழா

கூடலூர்:   நீலகிரி மாவட்டம் , கூடலூர் சுங்கம் காமராஜ் சாலையில் உள்ள பட்டத் துளசியம்மன் கோவில் 55–ம் ஆண்டு தேர் திருவிழா கடந்த 2–ம் தேதி தொடங்கி 6–ந் தேதி வரை நடை பெற்றது.   சிறப்பு பூஜைகள் நடை பெற்றன. மாலை 5 மணிக்கு  புஷ்ப ரதத்தில் பூ அலங்காரம்  ,இரவு 9மணிக்கு சிறப்பு தீபாராதனைநடைபெற் றது.5–ந் தேதி காலை 6 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆரா தனைகள், சிறப்பு தீபாரா தனைகள் நடைபெற்றன. மதி யம் 12 மணிக்கு உச்சி கால பூஜை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மேளதாளங்கள் முழங்க பட்டத்துளசியம் மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சிநடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !