மேலும் செய்திகள்
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
4173 days ago
கூடலூரில் ஸ்ரீசத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா ரத யாத்திரை
4173 days ago
கோபிசெட்டிபாளையம்: ஈரோடு மாவட்டம், செட்டிபாளையம் அருகே உள்ள பச்சமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன்தொடங்குகிறது. வருகிற 12- ம் தேதி சுப்பிரமணியசாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 8 மணிக்கு யாகசாலை பூஜை நடக்கிறது. தொடர்ந்து 10 மணிக்கு சுப்பிரமணியசாமிக்கும், வள்ளி-தெய்வானைக்கும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேர்த்திருவிழா வருகிற 13-ம் தேதி நடக்கிறது.
4173 days ago
4173 days ago