சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4245 days ago
பொங்கலூர்: பொங்கலூர் அருகே உள்ள கிழக்கு குள்ளம்பாளையத்தில் சக்தி விநாயகர் மற்றும் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் புதிதாக புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த 4–ந் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது பின்னர் சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக தீர்த்த கலசத்தை எடுத்து வந்தனர். காலை 7 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித தீர்த்தம் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்தனர்.