மாரியம்மன் கோயிலில்.. தண்ணீரில் விளக்கு எரிந்த அதிசயம்!
ADDED :4215 days ago
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் தட்டான்குட்டை மாரியம்மன் கோவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோயிலில் பங்குனி திருவிழா கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று நடந்த விளக்கு பூஜை நிகழ்ச்சியில் தண்ணீரில் கோயில் விளக்கு சுடர்விட்டு எரிந்தது. தண்ணீரில் விளக்கு எரியும் இந்த அதிசயம் திருவிழா நடக்கும் நாள் அன்று மட்டுமே ஆண்டுதோறும் நடைபெறுகிறது. மற்ற நாட்களில் வழக்கம்போல் எண்ணையை கொண்டுதான் விளக்கு ஏற்றப்படுகிறது. இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் அம்மனை தரிசித்து சென்றனர்.