காஞ்சிபுரம் ராதாகிருஷ்ணா கோயில் கும்பாபிஷேகம்
ADDED :4216 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் தாலுக்கா, காரியமங்கலம் கிராமத்தில் ஸ்ரீராதா ருக்மணி சமேத ஸ்ரீராதாகிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி விஷேச பூஜைகள் வாஸ்து ஹோமம், திருமஞ்சனம், கலசம் பிரதிஷ்டை ஹோமங்கள், முதல் கால பூர்ணாஹூதி, சயணாதிவாசம், கோபூஜை, கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, புண்யாவனம், இரண்டாம் கால ஹோமம் ஆகியன முடிந்தன. பின்னர் . இரவு சுவாமி திருவீதி உலா வந்தது. பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.