திண்டுக்கல் ஆஞ்சநேயருக்கு 10,008 பழக்காப்பு அலங்காரம்
ADDED :4217 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயருக்கு சித்திரை திருநாளன்று வஞ்சர அங்கி சேவை நடக்கிறது. இவ்விழாவின் போது ஆஞ்நேயருக்கு 10,008 பழங்களுடன் அலங்காரம் செய்யப்டுகிறது. இதற்காக ஏப். 13-ம் தேதிக்குள் அலங்காரத்திற்கு தேவையான ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி, கொய்யா, திராட்சை, மாதுளை, சாத்துக்குடி, எலுமிச்சை, தேங்காய், பலாப்பழம் மற்றும் பச்சை திராட்சை ஆகிய பழ வகைகளை பக்தர்கள் காணிக்கையாக வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.