உடுமலை ஷீரடி சாயிபாபா கோவிலில் ராம நவமி விழா
ADDED :4233 days ago
திருப்பூர்: உடுமலை தில்லைநகரில் உள்ள ஷீரடி சாயிபாபா கோவிலில் ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காகடஆர்த்தி, ஸ்ரீஆனந்த சாயிபாபாவிற்கு அபிஷேகம், விஷ்ணு சகஸ்ரநாமம், பாராயணம், ராமநாம சங்கீர்த்தனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று கணபதி ஹோமம் நடந்தது.
பின்னர் புதிய உற்சவமூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டு பால், நெய், தேன், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து உற்சவமூர்த்தி திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.