உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரி கோவில்களில் ராமநவமி சிறப்பு வழிபாடு

கிருஷ்ணகிரி கோவில்களில் ராமநவமி சிறப்பு வழிபாடு

கிருஷ்ணகிரி,  ;  ராமநவமியை முன்னிட்டு  நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் மற்றும் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  கிருஷ்ணகிரி நகரில் காட்டு வீரஆஞ்சநேயர் கோவில், ஓசூரில் உள்ள ராமர் கோவில், பெருமாள் கோவில்  ஆகிய கோயில்களில் தினமும் சிறப்பு அபிஷேகம், மாலை உபந்தியாஸங்களும், சிறப்பு கச்சேரிகளும் மற்றும் ஹோமங் களும் நடந்து வருகிறது. நேற்று ராமநவமியை முன்னிட்டு சீதாராமருக்கும், ஆஞ்சநேய ருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !