சிவனடியார்கள் ஆலோசனை!
ADDED :4233 days ago
காரிமங்கலம்: காரிமங்கலத்தில் ஸ்ரீ மகா விஷ்ணு ஆழ்வார்களும், திருச்சிற்றம்பலம் சிவனடியார்கள் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் லட்சுமண சுவாமிகள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, துணைத்தலைவர் நாராயணன், சுப்பிரமணி, ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ மகா விஷ்ணு ஆழ்வார்கள் பெயரில் குருபூஜை, சொற்பொழிவு, சிவனடியார், நம்பியாண்டார் நம்பி, 63 நாயன்மார்கள் பெயரில் குருபூஜை செய்தல், நலிவடைந்து வரும் குருபூஜை சங்கத்தின் மூலமாக நடத்த முடிவு செய்தல், ஆதரவற்ற குழந்தைகள் இல்லம், முதியோர்கள் இல்லம் ஆகியோருக்கு உதவி செய்தல், அரசு சலுகைகளை பெற்று தர நடவடிக்கை எடுத்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.