ரயிலடி சித்தி விநாயகர் கோயிலில் வருடாபிஷேகம்
ADDED :4237 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகர் கோயிலில், வருடாபிஷேக விழா நடந்தது. இதில், 108 வலம்புரி சங்குகளைக்கொண்டு, அனுக்ஞை, புண்யாக வாஜனம், வேதிகை பூஜை, சங்கு பூஜை உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. சங்காபிஷேகத்துடன் நடந்த தீபாராதனையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். செயல் அலுவலர் வேல்முருகன் முன்னிலையில், கைலாச குருக்கள் தலைமையிலான குழுவினர், ஏற்பாடுகளை செய்திருந்தனர்.