உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜபாளையம் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

ராஜபாளையம் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

ராஜபாளையம்  ராஜபாளையம் செண்பகத்தோப்பு சாலையில் அணைத்தலை ஆற்றங்கரையோரம் பழமை மிக்க விநாயகர் கோயில் உள்ளது. இக்கோவில் பல்வேறு திருப்பணி வேலைகளுடன் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக பூஜைகள் யாகசாலை பூஜைகளுடன் திங்கள்கிழமை துவங்கியது. நேற்று காலை யாகசாலை பூஜைகள் நிறைவு செய்யப்பட்டு புனித நீர் கலசங்களில் நிரப்பப்பட்டு வேத பாராயண முறைப்படி கோயில் விமானம், விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.  விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !