கமுதி ஸ்ரீவீரமாகாளியம்மன் கோயிலில் விளக்கு பூஜை
ADDED :4236 days ago
ராமநாதபுரம் ; ராமநாதபுரம் மாவட்ட கமுதியில் ஸ்ரீவீரமாகாளியம்மன் ஆலயம் உள்ளது. இகோயிலின் 13-ம் ஆண்டு பங்குனி விழாவையொட்டி 156-வது திருவிளக்கு பூஜை உற்சவம் நடைபெற்றது. பூஜையில் பங்கேற்ற பக்தர்கள் பாராயண பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை நடத்தினர். உற்சவத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன், தீப ஆராதனை பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.