உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் அணைப்பாளையம் மாரியம்மன் கோயில் விழா

நாமக்கல் அணைப்பாளையம் மாரியம்மன் கோயில் விழா

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம்  அணைப்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோயிலின் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.   தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும், இந்த விழாவில் கரகம் எடுத்தல், திருவிளக்கு பூஜை, பூவோடு எடுத்தல், பால்குட ஊர்வலம், அம்மை அழைத்தல், பொங்கல் வைத்தல் போன்றவை நடைபெற்றன. இன்று  ( வியாழக்கிழமை)  காலை அக்னிகுண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும்,  நாளை  (வெள்ளிக்கிழமை ) மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !