கிருஷ்ணகிரி பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :4236 days ago
ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி நான்குகால யாக பூஜைகள், நடைபெற்றன. நேற்று புதன்கிழமை காலை கலச புறப்பாடும், கும்பாபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து, அம்மனுக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.