நாமக்கல் சூடாமணியம்மன் தேர்த் திருவிழா
ADDED :4236 days ago
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஆர்.புதுப்பட்டி துலுக்க சூடாமணியம்மன் திருக்கோயிலின் தேர்த் திருவிழா நேற்று நடைபெற்றது. இக் கோயிலின் ஆண்டு திருவிழா ஏப்ரல் 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு அன்ன வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏப்ரல் 7இல் சிம்ம வாகனத்திலும், ஏப்ரல் 8இல் சிம்மம், குதிரை வாகனத்திலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா முக்கிய நிகழ்ச்சியான தேர்த் திருவிழா சிறப்பாக நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றன். தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.