புதுக்கோட்டை ஆஞ்சநேயருக்கு மஞ்சள் காப்பு
ADDED :4236 days ago
அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலையில் உள்ள ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு ஸ்ரீராமநவமியை முன்னிட்டு மஞ்சள் காப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. தொடர்ந்து மழை வேண்டியும்,உலக நன்மைக்காகவும் 108 கலச அபிஷேகமும், 108 வலம்புரி சங்கு அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் இரவு நடந்த நிகழ்ச்சியில் ஆஞ்சநேயருக்கு மஞ்சள் காப்பு அபிஷேகம் நடந்தது.