உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநிகோயில் பங்குனி உத்திரவிழா பாதுகாப்பிற்கு ஆயிரம் போலீசார்!

பழநிகோயில் பங்குனி உத்திரவிழா பாதுகாப்பிற்கு ஆயிரம் போலீசார்!

பழநி : பழநிகோயில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, உள்ளூர், வெளியூரை சேர்ந்த ஆயிரம் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பழநி கோயில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, தீர்த்த காவடியுடன், பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். ஏப்., 12 ல் திருக்கல்யாணம், ஏப்., 13 ல், தேரோட்டம் நடக்கிறது. வின்ச், படிப்பாதை, யானைப்பாதை, குடமுழுக்கு வழிப்பாதை ஆகிய இடங்களில், "மெட்டல் டிடெக்டர்கள் வைக்கப்பட்டுள்ளது. மலைக்கோயில் மற்றும் பாதவிநாயகர் கோயில் அருகே கண்காணிப்பு "கேமரா மூலம் பக்தர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். எஸ்.பி., டி.எஸ்.பி.,கள், உட்பட ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபடவுள்ளனர். தனியார்செக்யூரிட்டி சர்வீசை சேர்ந்தவர்கள், ஊர்க்காவல் படையினர், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வெளியூர் போலீசார் பாதுகாப்பு பணிக்காக இன்று பழநிக்கு வர உள்ளனர். டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் கூறியதாவது: பழநிக்குள் வந்து செல்ல வெளியூர், உள்ளூர் வாகனங்களுக்கு, விழாக்கால சிறப்பு அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது. அனுமதிச்சீட்டுள்ள சரக்கு வாகனங்கள், கார்கள் மட்டுமே, நகருக்குள் அனுமதிக்கப்படுகிறது. பஸ்ஸ்டாண்ட், கொடைக்கானல் ரோடு, பை-பாஸ் ரோடு போன்ற பகுதிகளில் வாகன தணிக்கை செய்யப்படவுள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !