திருப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல்விழா
ADDED :4236 days ago
திருப்பூர்: திருப்பூர், வீரபாண்டி அருகே, பாரதி நகர் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பொங்கல் விழா நடந்து வருகிறது. விழாவையொட்டி நேற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.