வால்பாறை சுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திரத்திருவிழா!
ADDED :4236 days ago
வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.இக்கோவிலின் 62ம் ஆண்டு பங்குனி உத்திரத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக காலை 7.00 மணிக்கு அபிேஷக பூஜையும், 8.00 மணிக்கு அலங்கார பூஜையும் நடந்தன. காலை 8.50 மணிக்கு முருகன் நற்பணி மன்றத்தலைவர் மதனகோபால் முன்னிலையில் திருக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் வரும் 13ம் தேதி மதியம் 2.00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணமும், 14ம் தேதி காலை 10.00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழாவும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை முருகன் நற்பணி மன்ற நிர்வாகிகள் மதனகோபால், வள்ளிக்கண்ணு, சிங்காரம், சீனிவாசன், இருளப்பன் உட்பட பலர் செய்து வருகின்றனர்.