உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குச்சனூர் பெரியாண்டவர் கோயில் கும்பாபிஷேகம்!

குச்சனூர் பெரியாண்டவர் கோயில் கும்பாபிஷேகம்!

சின்னமனூர் : சின்னமனூர் அருகே குச்சனூரில், மறவர் சன்மார்க்க சங்கத்தார்க்கு பாத்தியப்பட்ட பெரியாண்டவர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. முதல் இரண்டு நாளில் யாகசாலை பூஜைகள், கிராம ஜனம் அழைப்பு, மஹா கணபதி ஹோமம், பெரியாண்டவர் மூலமந்திர ஜப ஹோமம், சுவாமிகள் பிரதிஷ்டை நிகழ்ச்சிகள் நடந்தது. மூன்றாம் நாளில் விமான அபிஷேகம், பெரியாண்டவர் மற்றும் பரிவார தெய்வங்கள், தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவிற்கு குச்சனூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் ராமானுஜம் தலைமை வகித்தார். திருப்பணி மற்றும் கும்பாபிஷேக விழா பொறுப்பாளர்கள் பார்த்திபன், ரவிச்சந்திரன், ராஜசேகர், மணிக்கட்டிசாமி, சரவணன் முன்னிலையில், கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றி ராமசுப்பிரமணிய ஐயர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.சங்கரா கோஷம் எழுப்பி, ஆயிரக்கணக்கான பக்தர்களும், பெண்களும் கலந்து கொண்டு சுவாமி அருள் பெற்றனர். விழாவில், குச்சனூர் பேரூராட்சி துணைத் தலைவர் பந்தானம் ரவிச்சந்தின், அ.தி.மு.க., பேரூர் செயலாளர் காளிமுத்து, பேரூராட்சி நிர்வாக அதிகாரி ஜெயலட்சுமி, தொழிலதிபர்கள் வீரமணி, பரணி, சின்னமனூர் கண்ணம்மாள் கார்டன் ராஜேந்திரன், அகிலா மார்பிள்ஸ் உரிமையாளர் துரை, ஆனந்த கிருஷ்ணா நகைமாளிகை உரிமையாளர் ஞானப்பழம், ராமவிலாஸ் ஜூவல்லரி உரிமையாளர் மணிகண்டன், மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை திருப்பணி, விழா பொறுப்பாளர்கள் மற்றும் மறவர் சன்மார்க்க சங்கத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !