உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் 1,008 பாலபிஷேகம்!

திருத்தணி முருகன் கோவிலில் 1,008 பாலபிஷேகம்!

திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, வரும், 14ம் தேதி, 1,008 பாலபிஷேகம் மற்றும் ஊர்வலம் நடைபெறுகிறது. வரும், 14ம் தேதி, தமிழ் புத்தாண்டு (ஜய வருடம்) பிறப்பை முன்னிட்டு, திருத்தணி முருகன் கோவிலில், 1,008 பால்குட அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. விழாவை ஒட்டி, 14ம் தேதி காலை, 8:00 மணிக்கு, திருத்தணி நந்தி ஆற்றக்கரையோரம் உள்ள கோட்டா ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்தில் இருந்து, 1,008 பால் குடங்களை, பக்தர்கள் தலையில் சுமந்தவாறு நகரின் முக்கிய வீதிகள் வழி<யாகவும், மலைப்படிகள் வழி<யாக மலைக்கோவில் வளாகத்திற்கு சென்றடைவர்.பின், காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் தக்கார் ஜெய்சங்கர் மற்றும் ஆணையர் புகழேந்தி ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !