உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகாப்பான்குளம் கோவில் கும்பாபிஷேகம்

பெரியகாப்பான்குளம் கோவில் கும்பாபிஷேகம்

கம்மாபுரம்: பெரியகாப்பான்குளம்  அம்மாத்தாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.  கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த  8-ம் தேதி மாலை 6:00 மணிக்கு கணபதி, நவக்கிரக ஹோமம், விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து 9-ம் தேதி காலை 6:00 மணிக்கு நாடிச்சந்தானம், திரவிய ஹோமம், தீபாராதனை காலை 10:00 மணிக்கு கடம் புறப்பாடு, விநாயகர், வீரன், முனீஸ்வரம், அம்மாத்தாள்  கோவில், கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் சுவாமிகளுக்கு மகா அபிஷேகம்,தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !