ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் கோயிலுக்கு புதிய கொடிமரம்
ADDED :4235 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீ ஆண்டாள் கோயிலுடன் இணைந்த, ஸ்ரீவடபத்ர சயனர் கோயில் கொடி மரம் மிகவும் பழமை வாய்ந்தது. இதை அகற்றிவிட்டு புதிய கொடி மரத்தை அமைக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இக் கொடி மரத்தை நட ரூ.6 லட்சம் செலவில் 50 அடி நீளத்திற்கு தேக்கு மரம் வாங்கப்பட்டு, கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு, பணிகள் தொடங்கியுள்ளன. அடுத்த 10 நாள்களுக்குள் நிறைவு பெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.