ஏப்.,19ல் வராஹர் ஜெயந்தி!
ADDED :4235 days ago
மதுரை : மதுரை மேலுார் ரோடு அயிலாங்குடி கிராமம், லட்சுமி வராஹர் பெருமாள் கோயிலில், ஏப்.,19ல் வராஹர் ஜெயந்தி விழா நடக்கிறது.அன்று காலை 8 மணிக்கு, பெருமாளுக்கு விசேஷ சங்கல்ப புண்யாஹவாசனம், கும்பஸ்தாபனம், வேத திவ்யபிரபந்த பாராயணம், திருமஞ்சனம், அலங்காரம் நடைபெறும். காலை 11.30 மணிக்கு, வராஹ அவதார சரிதம் என்ற தலைப்பில், அழகர்கோவில் முகுந்தாச்சார்ய சுவாமியின் உபன்யாசம் நடைபெறும். மதியம் 12 மணிக்கு சாற்றுமுறை, தீர்த்த கோஷ்டி, பிரசாதம் வழங்குதல் நடைபெறும்.