தர்மபுரி கோட்டை கால பைரவருக்கு சந்தன காப்பு அலங்காரம்
ADDED :4305 days ago
தர்மபுரி: தர்மபுரிமாவட்டம், கோட்டையில் கால பைரவர் கோவிலில் உள்ளது. இக்கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சித்திரைக்கனி சிறப்பு பூஜைகள் நடந்தது. இவ்விழாவில் சந்தனகாப்பு அலங்காரம் மற்றும் வெள்ளி கவச கிரீடத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு காலபைரவரை தரிசித்தனர்.