உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கேரளாவில் விஷு கோலாகல கொண்டாட்டம்!

கேரளாவில் விஷு கோலாகல கொண்டாட்டம்!

திருவனந்தபுரம்: மலையாள மக்களின் புத்தாண்டான, விஷு நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. கேரளாவிலும், மலையாள மக்கள் வாழும் பகுதிகளிலும், பாரம்பரிய உற்சாகத்துடன் இந்த நாள் கொண்டாடப்பட்டது. அதிகாலையில் எழுந்து, விஷுக்கணி தரிசனம் என்ற பெயரில், கண்ணாடி முன் வைக்கப்பட்ட பழங்கள், பணம், நகைகளை பார்த்து, வரும் நாட்களிலும் அனைத்து வளங்களும் வேண்டும் என வேண்டினர். பின், கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபட்டு, விஷு கைநீட்டம் என்ற பெயரில், கோவில் பூசாரிகளிடம், புத்தாண்டு பரிசாக பணம், பிரசாதம் பெற்று மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !