முத்து மாரியம்மன் கோவில் நாளை மகா கும்பாபிஷேகம்!
ADDED :4231 days ago
விழுப்புரம்: கண்டமங்கலம் ஒன்றியம் வி.புதுப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன், திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை (17ம் தேதி) நடக்கிறது. விழாவை யொட்டி, இன்று (16ம் தேதி) மாலை 4:00 மணிக்கு முதல் கால யாகபூஜை, இரவு 7:00 மணிக்கு அஷ்டபந்தன சாற்றுதல் நடக்கிறது. தொடர்ந்து நாளை (17ம் தேதி) காலை 5:00 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை, கணபதி, கோ, சூர்ய, சந்திரன், துவார பூஜைகள், பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடக்கிறது. பின்னர் 7:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு முத்துமாரியம்மன், திரவுபதியம்மன் சுவாமிகள் வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா லட்சுமி நாராயணன் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.