கோவையில் விஷூ கொண்டாட்டம்!
ADDED :4231 days ago
கோவை : மலையாளிகளின் புத்தாண்டு தினமான விஷூ கோவையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் "தமிழ்ப் புத்தாண்டு" கொண்டாடப்படுவது போல கேரளாவில் விஷு பண்டிகை கொண்டாடப்படும். இதையொட்டி, கோவையில் வசிக்கும் மலையாளிகள் நேற்று விஷூவை வெகுசிறப்பாக கொண்டாடினர். சித்தாபுதுார் அய்யப்பன் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பழங்கள் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் சுவாமிக்கு நேர்த்திக்கடனாக படைத்தனர். உறவினர்கள், நண்பர்களுடன் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.