வடமதுரை பெருமாள் சுவாமி திண்டுக்கல் நகரில் வீதியுலா!
ADDED :4305 days ago
திண்டுக்கல் : திண்டுக்கல் நகரின் பல பகுதிகளில், வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் சுவாமி ஏப்., 20 வரை வீதியுலா செல்கிறார். பங்குனி திருவிழாவை முன்னிட்டு, வடமதுரை சன்னதியில் இருந்து, பல்லக்கில் திண்டுக்கல் புறப்பட்ட சுவாமி, முள்ளிப்பாடி சந்தனவர்த்தினி ஆற்றில் இறங்கி ராமதேவ மகரிஷிக்கு வரமளித்தார். தொடர்ந்து திண்டுக்கல் நகருக்குள் வந்த சுவாமிக்கு, நாகல்நகர் விஸ்வ பிராமண வாலிப சங்கத்தினரால் வரவேற்பு தரப்பட்டது. ஏப்., 20 வரை திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் புஷ்ப விமானம், குதிரை, கருட, சேஷ வாகனங்கள், புஷ்பபல்லக்கில் சுவாமி எழுந்தருளுவார். ஏப்., 21 வடமதுரை கோயிலுக்கு சுவாமி திரும்புவார். விழா ஏற்பாட்டினை கோயில் செயல் அலுவலர் வேலுச்சாமி, தக்கார் வேல்முருகன் செய்து வருகின்றனர்.